மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிரைவர் பணிக்கான 5 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். காலியாகயிருக்கும் ஐந்து இடங்களில் மூன்று இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒரு இடம் எஸ்.சி பிரிவினருக்கும் மற்றொரு இடம் எஸ்.டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.17,270/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.04.2023. இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக சமர்ப்பிக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் டிரைவிங் டெஸ்ட் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய rbi.org.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.