fbpx

மொபைலில் சாட்டிங் செய்வதில் பிஸி! “புக் எடுத்து படி” என கண்டிப்பாக கூறிய பெற்றோர்! பரிதாப முடிவு!

சென்னையில் படிக்கச் சொல்லி கண்டித்ததால் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டு குளியல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியைச் சார்ந்தவர் பரிமளராஜ் இவருக்கு ஒரே மகன் ரிஷி. 14 வயதான ரிஷி அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம் அதனால் எப்போதும் ஊர் சுற்றுவது ஆன்லைனில் நண்பர்களுடன் பேசுவது என வாழ்க்கையை ஜாலியாக கழித்திருக்கிறார்.

அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு என்பதால் பெற்றோர் இவரிடம் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்ததாக தெரிகிறது. படிப்பில் குறைவாக மதிப்பெண்கள் பெற்று வந்த நிலையில் அடுத்த வருடத்தை மனதில் வைத்து நன்றாக படித்து பொறுப்புடனிருக்க வேண்டும் என பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இது ரிஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.தினம்தோறும் தனது பெற்றோர் படி இப்படி என டார்ச்சர் செய்வதாக கருதிய அவர் வீட்டின் குளியலறைக்கு சென்று தனது கைலியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குளியலறைக்குச் சென்ற மகன் நீண்ட நேரம் வெளியே வரவில்லை என பயந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர்களது ஒரே மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றிய பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது போலீஸ்.

Rupa

Next Post

’நோ பால்’ கொடுத்த நடுவர்..!! கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற கொடூரம்..!! பெரும் பரபரப்பு..!!

Mon Apr 3 , 2023
ஒடிசா மாநிலம் சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டி ஒன்றை விளையாடியுள்ளனர். ஜாலியாக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக இருந்துள்ளார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போது, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக சைகை காட்டினார். ஆனால், அது நோ பால் […]

You May Like