அதிமுகவின் பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு பின்னர் அந்த கட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு மறுபடியும் பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அதிமுக தரப்பு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு, கர்நாடக மாநில தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்குகள் காரணமாக, அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத காரணத்தால், வேட்பாளர்களை நிறுத்துவதில் அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வடக்கு நீதிபதி பிரதீப் எம் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.