fbpx

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 7,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இது கடந்த 200 நாட்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,998 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.71% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,10,127 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே இந்தியாவில் வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதாவது அடுத்த சில நாட்களுக்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்றும், ஆனால் 10 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கும் கூறியுள்ளனர்.. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

ஒமிக்ரான் மற்றும் அதன் துணைப் பரம்பரைகள் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக தொடரும் அதே வேளையில், தொற்று தீவிரமாக பரவில்லை.. XBB.1.16 மாறுபாட்டின் பரவலானது இந்த ஆண்டு பிப்ரவரியில் 21.6% ஆக இருந்து மார்ச் மாதத்தில் 35.8% ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த மாறுபாடு காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது இறப்பு அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்படுகிறது…

Maha

Next Post

ஐபிஎல் 2023 சென்னை அணியை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்…..!

Thu Apr 13 , 2023
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களம் இறங்கினர். இதில் ஜெயிஸ்வால் பத்திரங்கள் எடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ஜாஸ் பட்லருடன் இணைந்த […]
ஐபிஎல் தொடரை மொபைல், லேப்டாப்பில் இலவசமாக பார்ப்பது எப்படி..? இதை மட்டும் பண்ணா போதும்..!!

You May Like