fbpx

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்…! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..‌!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழ்நாட்டில் இன்று முதல் 61 நாட்களுக்கு தடை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Apr 15 , 2023
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி நீரோடி வரை 18மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான தடை காலம் நள்ளிரவு முதல்தொடங்கியது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக் காலத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் […]

You May Like