fbpx

இந்த 4️ மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க உள்ள மழை…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில், இந்த வெயிலுக்கு இதமாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

அதேபோன்று மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது வெப்பம் அதிகரித்து வந்ததால் தவித்து வந்த மக்களுக்கு இந்த கோடை மழை குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இன்று காலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

இரவு, பகலாக மாறி மாறி வேலை..!! திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் கேள்வி..!!

Mon Apr 24 , 2023
உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள். ஒருவருக்கு பகலிலும் மற்றொருவருக்கு இரவிலும் வேலை. இதில் திருமண உறவை பேணுவதற்கு உங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. ஆனால், திருமணத்தில் வருத்தம் இருக்கிறது. இந்த திருமண பந்தத்தை பேணுவதற்கு […]

You May Like