தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதர்களிடையே மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதாவது நீட் தேர்வுக்கு முன்பாக பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு பின்னர் முடிவுகளை வெளியிடுவதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.