சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள உள்ள வெளிநாடு பயணம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு புதிய தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.