பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாஞ்சி ( 36).தலித் சமூகத்தை சேர்ந்த ராஜேஷ் கூலி தொழிலாளி என்று கூறப்படுகிறது இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கிழிச்சேரி பகுதியில் கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்திருக்கிறார். இத்தகைய நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இவர் கடை பகுதியில் இருக்கின்ற தெருவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை ஆரம்பித்தனர். மேலும் அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இருந்திருப்பார் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து இருக்கின்றன. அதன் பிறகு பிரேத பரிசோதனை ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த நபர் மோசமான தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பிறகு காவல்துறை செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமரா போன்ற ஆதாரங்களை வைத்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கிறது.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் 9 பேர் கொண்ட கும்பல், ராஜேஷை கடுமையாக அடித்து கொலை செய்திருக்கிறார்கள் கடையில் பொருட்கள் திருடு போயிருப்பதாகவும் அதனை ராஜேஷ் தான் எடுத்திருப்பார் என்று தெரிவித்தும் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த கொடூர தாக்குதலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷை, அதிகாலை 2 மணி அளவில் சாலை ஓரத்தில் தூக்கி வீசிவிட்டு அவர்கள் சென்று விட்டனர். இவர்களுடைய கொடூரமான இந்த தாக்குதல் காரணமாக, ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அப்சல், பேசில், சப்ருதின் , மெஹ்பூப், அப்துஸ்சமத்,நாசர் ஹபீப் உள்ளிட்ட 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மதன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் இது போன்ற கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை கேரளா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.