fbpx

ஜூன் 10-ம் தேதி: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வரும் 10-ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்:

பகுதி அலுவலகம்-1 – திருவொற்றியூர்
பகுதி அலுவலகம்-2 – மணலி
பகுதி அலுவலகம்-3 – மாதவரம்
பகுதி அலுவலகம்-4 – தண்டையார்பேட்டை
பகுதி அலுவலகம்-5 – இராயபுரம்
பகுதி அலுவலகம்-6 – திரு.வி.க.நகர்
பகுதி அலுவலகம்-7 – அம்பத்தூர்
பகுதி அலுவலகம்-8 – அண்ணா நகர்
பகுதி அலுவலகம்-9 – தேனாம்பேட்டை
பகுதி அலுவலகம்-10 – கோடம்பாக்கம்
பகுதி அலுவலகம்-11 – வளசரவாக்கம்
பகுதி அலுவலகம்-12 – ஆலந்தூர்
பகுதி அலுவலகம்-13 – அடையாறு
பகுதி அலுவலகம்-14 – பெருங்குடி
பகுதி அலுவலகம்-15 – சோழிங்கநல்லூர்

இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Maha

Next Post

அந்த காட்சிகளுக்காக கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகைகள்..!! அனைவரையும் ஓரம் கட்டிய தமன்னா..!!

Thu Jun 8 , 2023
இப்போதெல்லாம் டாப் நடிகைகள் கூட கவர்ச்சி பாடல் மற்றும் பலான காட்சிகளில் நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. முன்பு இந்த காட்சிகளுக்கெல்லாம் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இப்போது பெரும்பாலான நடிகைகளும் நீயா நானா என போட்டி போட்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் படம் முழுக்க நடித்தால் கிடைக்கும் பணத்தை ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்துக் கொடுத்தால் கோடிக்கணக்கில் […]
அந்த காட்சிகளுக்காக கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகைகள்..!! அனைவரையும் ஓரம் கட்டிய தமன்னா..!!

You May Like