fbpx

செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை…! மருத்துவமனை விரைந்த அமைச்சர் உதயநிதி…!

அமலாக்கத் துறையின் சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியம், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அமலாக்கத் துறை சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

Vignesh

Next Post

செந்தில் பாலாஜி அதிரடி கைது...! காலை 10 மணி அளவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்...!

Wed Jun 14 , 2023
இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை […]

You May Like