fbpx

இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது – சந்திரயான் 3

இஸ்ரோ நிலவை ஆய்வு சந்திரயான் 3 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது. இதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து முடிந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான பணி தற்போது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள். இந்தியாவிற்கான விண்வெளி ஆய்வு பணிகளை இஸ்ரோ அமைப்பு செய்து வருகிறது. இஸ்ரோ சந்திரனிற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திராயன் என்ற திட்டத்தை வகுத்து விண்வெளியில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. முதன்முறையாக சந்திரயான் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்பொழுதே சந்திரயான் 3 என்ற ஒரு திட்டத்தை துவங்கப் போவதாக இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு விட்டது. முன்னர் நடந்தது போல் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இந்த முறை வெற்றிகரமாக நிலவில் இந்தியா தரை இறங்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு சோதனைகளும் செய்யப்பட்டுவிட்டன. வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சோதனைகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு தற்போது ஏவுதலுக்கு தயாராக தயார் செய்யப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட் சரியாக இந்த லேண்டர் மற்றும் ரோவரை நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் முன் வரை கொண்டு சென்று விடும். பின்பு அங்கிருந்து லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிக்கப்பட்டு லேண்ட்டர் நிலவில் தரையிறக்கப்படும். லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பின்பு அதிலிருந்து ரோவர் வெளியேறி தனது ஆய்வு பணிகளை துவங்கி விடும். தற்போது இந்த சந்திரயான் 3 திட்டத்திற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக லேண்டர் பாதுகாப்பாக திரையறங்குவது, சாஃப்டான லேண்டிங், மற்றும் ரோவர் நிலவின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க நிலவிலிருந்து பூமியையும் ஆராய்ச்சி செய்யும் பணியையும் பணிக்காக இந்த லேண்டருடன் ஸ்பெக்ட்ரோ போலோமெட்ரி ஆப் ஹாபிட்டபிள் பிளானட் எர்த் என்ற ஒரு கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இது நிலவின் நீள் வட்ட பாதையிலிருந்து பூமியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திரயான் 3 திட்டத்திற்காக மொத்தம் ரூ 615 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

Maha

Next Post

மக்களே மறந்துறாதீங்க..!! சட்டென மாறிய வானிலை..!! அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்காம்..!!

Thu Jun 29 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (29.06.2023) மற்றும் நாளை (30.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், (01.07.2023 மற்றும் 02.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் […]

You May Like