fbpx

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது அசிங்கமா இல்ல….?காவல்நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு ஏற்ப்பட்ட கொடூரம்……!

அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. அங்கே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பீமன் ராய் சிறுமியை மிரட்டி ஆடைகளை களையச் செய்து நிர்வாணப்படுத்தி இருக்கின்றார்.

மேலும் காவல் நிலையத்தில் இருந்த மற்ற காவல் துறையினர் முன்னிலையில் அந்த சிறுமியை நிர்வாணமாக்கி அதனை புகைப்படம் எடுத்த பீமன் ராய் தொடர்ந்து, அவருக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். பாதிப்புக்குள்ளான சிறுவி தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை புகார் கடிதமாக எழுதி காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி இருக்கிறார். இதனை தொடர்ந்து, டிஐஜி பிரஜன்ஜித் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார் இது குறித்த அறிக்கையை ஆசாம் மாநில டிஜிபி ஜிபி சிங்கிடம் சமர்ப்பித்தார்.

சிறுமி வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு பீமன் ராயை பணியிடை நீக்கம் செய்து அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பீமன்ராய் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.. அத்துடன் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

ஸ்ருதிஹாசனிடம் குழந்தையாகவே மாறிய கமல்ஹாசன்..!! இணையத்தை கலக்கும் கியூட் ரீல்ஸ் வீடியோ..!!

Fri Jun 30 , 2023
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மேலும், கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது […]
ஸ்ருதிஹாசனிடம் குழந்தையாகவே மாறிய கமல்ஹாசன்..!! இணையத்தை கலக்கும் கியூட் ரீல்ஸ் வீடியோ..!!

You May Like