fbpx

பரபரப்பான சூழலில் தமிழக அரசியல்…!செந்தில் பாலாஜி வழக்கு… 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணை…!

செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் வழக்கின் விசாரணையானது இன்று நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

ரெடி..! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஒதுக்கீட்டு இருக்கை விவரம்...! முன்கூட்டியே வெளியானது...!

Thu Jul 6 , 2023
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி, வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள்‌ 10.07.2023 அன்று வெளியிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்‌ தற்போது முன்கூட்டியே www.skilltraining.tn.gov.in என்ற […]

You May Like