பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் ஜுன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்…!

college admission 2025

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், 25 நாட்களில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி வரை www.tneaonline.org-ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பிற்கு சேர 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: “நான் உயிரோடு இருக்கக் கூடாது”..!! “யாருக்கும் தெரியாமல் எங்காவது போய்விட வேண்டும்”..!! ஜி.கே.மணி வேதனை

Vignesh

Next Post

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் மீனவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்...! அரசின் சூப்பர் திட்டம்

Sun Jun 1 , 2025
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]
money 2025

You May Like