fbpx

வீட்டில் நிறுத்தப்பட்ட கார் திடீரென்று வெடித்த மர்மம்…..! உரிமையாளர் பரிதாப பலி காரணம் என்ன……?

கேரள மாநிலத்தில், வெளியே சென்று விட்டு,அதன் பின்பு வீட்டிற்கு வந்து, நிறுத்தப்பட்ட நிலையில், வெடித்து சிதறிய காரில், இருந்த உரிமையாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கார் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது இதுவரையில் தெரியவில்லை. கேரள மாநிலம், ஆலப்புழா மாவேலிக்கரையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை, அதாவது, நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், பயணித்த கிருஷ்ண பிரகாஷ்(35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாவேலிகரையில் காரஜ்மா பகுதியை சேர்ந்த இவர், தன்னுடைய வீட்டில் காரை நிறுத்திய போது இந்த திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், உயிரிழந்த அந்த காரின் உரிமையாளர், மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, இன்டர்நெட் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார் என்று சொல்லப்படுகிறது. பணிகள் முடிவடைந்து, வீட்டிற்கு சென்றபோது இந்த திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கார் வெடித்து, பயங்கர சத்தம் எழுந்ததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் உடனடியாக அந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆகவே தீயணைப்பு படையினர் வந்து. தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கிருஷ்ணபிரகாசை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.

ஆனாலும், இந்த விபத்து குறித்த காரணம் என்ன? என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. கிருஷ்ணபிரகாசுக்கு இதுவரையில், திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Next Post

வருமானத்திற்கு அதிகமான சொத்து..!! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Mon Aug 7 , 2023
கடந்த அதிமுக ஆட்சியில் 8 ஆண்டு காலம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஜயபாஸ்கர். இவர், தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பணம், நகை, சொத்து […]

You May Like