பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வந்த 6️ வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை வழங்கிய, 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடசென்னை புது காமராஜர் நகர் நான்காவது தெருவில் வசித்து வரும் ஒரு சிறுமியை அந்த சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றுக்கு சென்று, சில பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது, அந்த கடையில் இருந்த பாண்டியன் என்ற 65 வயது முதியவர் ஒருவர், அந்த சிறுமியை வழிமறித்து, அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, அழுது கொண்டே, வீட்டிற்கு சென்று, இது பற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறி இருக்கிறார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து, உடனடியாக, காசிமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கியதால், காவல்துறையினர், தலைமறைவாக இருந்த முதியவர் பாண்டியனை, எண்ணூர் பகுதியில் கைது செய்து, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின், பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.