விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தின் ஒரு பகுதியாக “இல்லம் தோறும் தேசியக் கொடி” 2023, இயக்கம் ஆகஸ்ட் 13 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் பெருமளவில் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் தேசியக் கொடி இருசக்கர வாகனப் பேரணி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.