பலர் படித்து, முடித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை நம்முடைய செய்தி நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. ஆகவே, வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நம்முடைய நிறுவனத்தை தொடர்ந்து, பின்பற்றினால், உங்களுக்கான வேலை மிக விரைவில் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அந்த விதத்தில், project scientists-||, project associate, பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை the wildlife institute of india நிறுவனம் சமீபத்தில், வெளியிட்டு இருக்கிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற நபர்கள், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களையும் இந்த செய்தி குறிப்பில் தொகுத்து வழங்கி இருக்கிறோம். விருப்பமான நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
Project scientist-||,project associate, principal project associate பணிகளுக்காக மொத்தம் 11 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதை 35 முதல் 40 வரையில் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வயது தளர்வுகளுக்கான விவரங்கள் குறித்து அறிய, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு, தெரிந்து கொள்ளவும். இந்த பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 67 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Download Notification PDF