“முதல்வரை காவல்துறையினர் மதிக்கவில்லை.. அஜித் மாதிரி என்னையும்..?” – போலீசார் உடன் சவுக்கு சங்கர் வாக்குவாதம்..!

savukku shankar 2025 07 02 13 41 29 1 1

சென்னை பரங்கிமலை காவல் நிலையம் வாசலில் இன்று சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னையும் அஜீத் மாதிரி அடிப்பீங்களா? போலீஸ் அராஜகம் மக்களுக்கும் தெரியட்டும் என கோஷமிட்டார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சவுக்கு மீடியா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் எத்தனை கொடுமைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது என எல்லாருக்கும் தெரியும். என் வீட்டில் மலம் ஊற்றப்பட்டது. சாக்கடை ஊற்றப்பட்டது. என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. கஞ்சா வழக்கு போடப்பட்டது. இரண்டு முறை குண்டர் சட்டத்தை நான் சந்தித்திருக்கிறேன்.

இதற்கெல்லாம் பிறகு ஒரு அலுவலகத்தில் மீடியா பணியை செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய கேமராமேன் மற்றும் எடிட்டர்களின் வீட்டிற்கு இரவு 12 மணிக்கு சென்று 17 போலீசார் பைக்கை எடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

மறு நாள் காலை நான் தலைமை செயலகம் சென்று உள்துறை செயலாளரை சந்தித்து மீடியா நடத்தவிடாமல் இடையூறு செய்வதாக புகார் அளித்த பிறகு அன்று மாலை இரண்டு பேரின் இருசக்கர வாகனமும் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு என் அலுவலகத்தில் பணியாற்றும் கேமராமேன் பிரசாந்த் அலுவலக பணி முடிந்து வெளியே வந்ததும் அவரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்துவிட்டார்கள்.

காவல் நிலையம் சென்று காரணம் கேட்டால் 6 ஆயிரம் ரூபாய் ஃபைன் நிலுவையில் உள்ளது என கூறினார்கள். தாயின் நகையை அடகு வைத்து பணத்தை கட்டி 15 நாட்கள் ஆன பிறகும் பைக்கை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகளால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொருவரிடமும் தினம் தோறும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அஜித்குமார் நகையை திருடினாரா இல்லையா என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று கொன்றுவிட்டார்கள். இப்படிதான் காவல்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. முதல்வரும் கூச்சமே இல்லாமல் மன்னிப்பு கேட்கிறார். இதற்கு வெட்கப்பட வேண்டும்.

அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு ஒரு பதில் கூட தமிழக அரசு அளிக்கவில்லை. சிபிஐ இந்த விசாரணையை கையில் எடுப்பதற்குள் தமிழக காவல்துறை இந்த வழக்கின் தடயங்களை அழித்துவிடுவார்கள் என்ற சந்தேகத்தினால் தான் மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அஜித்குமார் இறந்ததால் தான் இந்த வழக்கு வெளியே வந்துள்ளது. இல்லையென்றால் மறைத்திருப்பார்கள். முதல்வரை காவல்துறையினர் மதிப்பதில்லை என்பது தான் இதன் மூலம் தெரிகிறது.

Read more: “டாய்லெட் கழுவ கூட ரெடி.. ப்ளீஸ் உதவுங்க..!!” வறுமையின் பிடியில் வாழும் கவுண்டமணி பட நடிகை.. கண்ணீர் மல்க வேண்டுகோள்

Next Post

மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறும்.. எதையெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா..?

Wed Jul 2 , 2025
மீன் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன் சாப்பிடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. மீனுடன் சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம். பலர் மீன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீனில் மெலிந்த புரதம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை […]
fish 2

You May Like