பெரும் சோகம்… திமுகவின் மூத்த தலைவர் காலமானார்…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

DMK 2025

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.

“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல்.

தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் – தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி...! தமிழக அரசு அறிவிப்பு...!

Sat Jul 5 , 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டத்தால் 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் […]
money tn govt 2025

You May Like