பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

MK Stalin dmk 6

சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (வயது 50) த/பெ.மூக்கையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 50) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது 37), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 29), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (வயது 28) மற்றும் ரமேஷ் (வயது 20) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இன்று தேசிய மருத்துவர் தினம்!. முதலமைச்சராக இருந்தபோதும் மருத்துவர் பணி; Dr. பி.சி. ராயின் மகத்தான சேவை!

Vignesh

Next Post

உலகளவில் பிரபலமடைந்த இந்தியாவின் UPI!. இனி இந்த கரீபியன் நாட்டிலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்!

Mon Jul 7 , 2025
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது UPI அதாவது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக அவர்கள் மாறியுள்ளனர். அதாவது இனிமேல், இங்குள்ள எந்தவொரு பொருளின் பரிவர்த்தனைக்கும் UPI மூலம் பணம் செலுத்தலாம். பீம் ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் […]
upi NPCI

You May Like