தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று…! இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…!

rain 2025 2

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12, 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 3 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: யாருகிட்ட.. அடி மடியிலேயே கை வைத்த ஈரான்.. பதறும் உலக நாடுகள்.. இந்தியாவுக்கும் ஆபத்து..

Vignesh

Next Post

அடுத்த அதிரடி!. கனடா மீது 35% வரி விதித்த டிரம்ப்!. ஆகஸ்ட் 1 முதல் அமல்!.

Fri Jul 11 , 2025
பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]
canada trump 35 11zon

You May Like