தமிழகமே…! பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்..! இன்று ஒரு நாள் மட்டும்…!

patta 2025

மங்களகரமான தினமான இன்று மற்றும் 16-ம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.

அதன் அடிப்படையில், இன்று மற்றும் 16-ம் தேதிகளில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டம்...? மாநில தலைவர் கொடுத்த விளக்கம்...!

Mon Jul 14 , 2025
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு […]
Annamalai 2025

You May Like