புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… தமிழகத்தில் இன்று மிக கனமழை…! வானிலை எச்சரிக்கை…!

cyclone rain 2025

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்!. அலுமினியம் ஃபாயிலில் பேக்கிங் செய்த உணவுகளை உட்கொள்கிறீர்களா?. இந்த 5 உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்!.

Sat Jul 26 , 2025
உணவுகளை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயில் இப்போது ஒவ்வொரு சமையலறையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் அதன் பயன்பாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போதெல்லாம், பலர் சமையலில், உணவைப் பாதுகாக்க அல்லது பார்சல்களுக்கு அலுமினிய பாயிலை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் வசதியானது என்றாலும், அதை அதிகமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுமினிய பாயிலை அதிகமாகப் பயன்படுத்துவதால் அலுமினியம் […]
Aluminium foil 11zon

You May Like