அட்டகாசம்..! 6000 பேருக்கு ரூ.40,000 கடன் வழங்கும் திட்டம்…! யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க முடியும்…?

tn Govt subcidy 2025

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG), திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) தனிநபர் மற்றும் திருநங்கைகளின் (மூன்றாம் பாலினத்தவர்) வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவித்திடவும், தனி நபர் ஒருவருக்கு ரூ.40,000 வீதம் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்: மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர்,கணவர், மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். திருநங்கையர்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் இக்கடனுதவி வழங்கப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊரகப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி எனில் UDID அடையாள அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். திருநங்கையர்கள் எனில் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலகின் இந்த ஒரு விமான நிலையத்தில் மட்டும் தான், ரன்வேயில் ரயில் கடந்து செல்லும்.. விமானம், ரயில்கள் எப்படி இயக்கப்படுகின்றன?

Thu Jul 31 , 2025
Have you ever heard of an airport with a train track between the runways?
152370009 1

You May Like