“போன மாதம் ஒரு மாணவி.. இந்த மாதம் ஒரு மாணவர்.. இந்த துயரம் தொடரக்கூடாது.. அமைச்சர் பதில் சொல்லணும்..” அண்ணாமலை காட்டம்..

Screenshot 2025 02 12 080822 1

திருச்சி அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார்.. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்கள் பெண்கள் இருவருக்கும் தனித்தனி விடுதி வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு, பயோ சி.எஸ்.சி பிரிவில் படித்து வரும் யுவராஜ் வயது 17 என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.. விடுதி அறையில் உள்ள ஃபேனில் கேபிள் ஒயரை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன யுவராஜ் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.. உயிரிழந்த மாணவர் வேலூர் மாவட்டம் கொடிய நத்தம் வசந்த நகர் எம்.குப்பம் பகுதியைச் சார்ந்த பலராமன் என்பவரின் மகன் என்று சொல்லப்படுகிறது.. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.

துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

உடனடியாக, மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும். மேலும், மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்துப் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : My Tvk செயலி ஓனர் பாஜக பிரமுகர்? இதுல கொள்கை எதிரியாம்.. அப்ப உண்மையான கபடதாரி விஜய் தானா?

RUPA

Next Post

ட்ரம்ப் சொன்னது தான் சரி.. இது பிரதமர், நிதியமைச்சரை தவிர எல்லாருக்குமே தெரியும்.. ராகுல்காந்தி அட்டாக்..

Thu Jul 31 , 2025
Rahul Gandhi has said that except the Prime Minister and the Finance Minister, everyone knows that the Indian economy is dead.
rahul gandhi donald trump 314022931 16x9 0 1

You May Like