டிஎன்பிஎஸ்சி மூலம் 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய ஒப்புதல்…!

tnpsc group 2

டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். தற்போது 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

Vignesh

Next Post

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?. இத்தனை சிறப்புகள் இருக்கா?

Mon Aug 4 , 2025
ஆடி மாதம் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், உடலை குளுமை படுத்தும் கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதனால் வீடு முழுவதும் புழுதியாகவும் அதிகம் குப்பை சேரும் வண்ணம் இருக்கும். ஆடிக்காற்றில் […]
aadi koozh 11zon

You May Like