தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவன மின்சார கார் விற்பனை…! நேரடியாக தொடங்கி வைக்கும் முதல்வர்…!

MK Stalin dmk 6

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.


வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக ரூ.1,120 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வி.எஃப்-6, வி.எஃப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் வின்ஃபாஸ்ட் ஆலைக்கு சென்று, தொழிற்சாலையை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார். மேலும் தூத்துக்குடியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். இதில், பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில நிறுவனங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

Vignesh

Next Post

பரபரப்பு..! கூட்டணி குறித்து கருத்து கூறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க...! ஓ.பி.எஸ் கொடுத்த எச்சரிக்கை...!

Mon Aug 4 , 2025
அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் […]
ops 2026

You May Like