கணவன் இரவு பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மார்பகங்கள் கிழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சீதாராம காலனியில் வசிக்கும் பிரசாத் மற்றும் மாதுரி தம்பதியினருக்கு, புஷ்பகுமாரி (7), ஜெசி நோவா (5) என்ற இரு மகள்கள் உள்ளனர். பிரசாத் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இரவு வேலைக்காக சென்றிருந்த பிரசாத், நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, மனைவி மற்றும் இரு மகள்களும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது தலையில் பலத்த காயங்கள் இருந்தன. வீட்டின் உள் நிலை மிகவும் கொடூரமாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மாதுரியின் மார்பகம் மற்றும் தொடைப்பகுதிகளில் பிளேடால் அறுக்கப்பட்ட கடுமையான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு தீவிர வன்முறை அல்லது பாலியல் வன்கொடுமையின் பின்னணி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மூவரையும் ஒரே சமயத்தில் கொலை செய்ய முடிந்தது என்பதால், இது திட்டமிட்டு செயல்பட்ட ஒரு கும்பலின் செயல் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பு கேமரா பதிவுகள், சாட்சிகள் மற்றும் கைரேகை ஆதாரங்கள் மூலம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மர்ம நபர்கள் குறித்து தகவல் கிடைக்கும்வரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சினிமா பாடலுக்கு AI மூலம் இசையமைத்த அனிருத்.. அவரே ஓபனா சொல்லிட்டாரே..!!