தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் வைத்து கைது…!

meera 2025

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது.

பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக இருந்து வந்த மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில், வாரண்டை நிறைவேற்றாத போலீஸாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. டெல்லி நகர வீதிகளில் சுற்றி வரும் நடிகை மீரா மிதுனை மீட்கக் கோரி, அவரது தாய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த நிலையில் நேற்று நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Vignesh

Next Post

ஆடி செவ்வாயில் விரதமிருந்து வழிபட்டால் கண்டிப்பாக கடன் சுமை தீரும்!. சுமங்கலி பெண்களே இத மறந்துடாதீங்க!

Tue Aug 5 , 2025
அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது. […]
aadi tuesday 11zon

You May Like