சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை நடைபெறுகிறது.
சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல்துறையுடன், ஆயுதப்படை காவலர்கள் இணைந்து பணியில் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பிரிவுகளில் உள்ள பெண் காவலர்களும், இரவுப் பணி மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பெண் காவல்துறையினர் பணிச்சுமையை குறைக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பேணிக்காக்கவும், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் நிர்வகிக்க வசதியாக, இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெண் காவலர்களின் கோரிக்கைகளை ஏற்று சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 45 வயதிற்கு மேற்பட்ட பெண் காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Read More: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?