கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதே போல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை திமுக நிர்வாகிகள் பலர் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, புதுக்கோட்டை அதிமுக மாவட்ட எம்ஜிஆர் அணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஆர். கார்த்திக் தொண்டைமான் முதலமைச்சரை சந்தித்து அவர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
2012 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் மீதுள்ள அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்களுடன் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2026 தேர்தல் முன்னிட்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி வெவ்வேறு கட்சியில் இணைந்து வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Read More: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?