இனி சுடிதார் அனுமதி கிடையாது…! அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம்…!

school holiday 2025

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை மாற்றம் கைவிடப்பட்டது.

அதே நேரத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஓவர்கோட் அணியும் முறை நடைமுறையில் உள்ளது. ஒவர்கோட் சீருடை மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும். இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து மாணவர்கள் ஒவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி...! பள்ளி கல்வித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட போகும் அறிவிப்பு...! என்ன தெரியுமா...?

Fri Aug 8 , 2025
பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், ‘மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் கடந்த ஆண்டு அளித்தது. மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி […]
mk Stalin 2025 4

You May Like