தனது மனைவி அவரின் கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த கணவன் யாரும் எடுக்காத ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது மனைவியை அவரின் கள்ள காதலனுக்கே திருமணம் செய்து வைத்தார் அந்த கணவர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ், இவருக்கு ரூபி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்று ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்தனர்.
இந்த விவகாரம் கணவர் மனோஜ்க்கு தெரிந்ததும், அவர் பலமுறை ரூபியிடம் அந்த உறவை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, மனோஜ் வெளியூர் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
கணவன் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரூபி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக மனோஜ் திடீரென வீடு திரும்ப, ரூபி மற்றும் கள்ளக்காதலன் ஒரே படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய கணவன் கோபத்தில் செய்வதறியாது திணறினார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு கதவை திறந்த மனோஜ் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ரூபியின் பெற்றோரை அழைத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றார். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து, “இனி நமக்குள் எந்தத் தொடர்பும் இல்லை; நீ புதிய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்று எழுதி ஒப்பந்தக் கடிதமும் கொடுத்தார்.