அதிர்ச்சி..! எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து நிற்கவைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்…!

bjp flag eps 2025

கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் முடித்துக் கொண்டு தற்பொழுது மூன்றாவது கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தில் அதிமுக தொண்டர்கள் பாஜக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்தி, பள்ளி சீருடைகள் மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

Vignesh

Next Post

புதிய விளையாட்டு மசோதாவின் முக்கிய சீர்திருத்தங்கள், சிறப்பம்சங்கள் என்னென்ன?. முழுவிவரம்!

Tue Aug 12 , 2025
இந்தியாவின் விளையாட்டு அமைப்புகளை கண்காணிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் புதிதாக தேசிய விளையாட்டு போர்டு (என்.எஸ்.பி.,) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா பார்லிமென்ட்டில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விளையாட்டு மசோதா நேற்று திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசின் விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய விளையாட்டுகளில் இது மிகப்பெரிய சீர்திருத்தம் என்று கூறினார். வாக்கு திருட்டு […]
New Sports Bill mansukh mandaviya 11zon

You May Like