பிகார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி..!திருமாவளவன் பகீர்…

thirumavalavan 2025

பிகார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது என திருமாவளவன் குற்றச்சாட்டு.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பேசிய எம்.பி திருமாவளவன்; தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து கொண்டு பிகாரில் திருட்டு வேலைகளை செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமித்ஷா, தமிழகத்திற்கு வரும் போது 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி உருவாகும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார். பிகார் தில்லு முல்லு குறித்து, ராகுல் காந்தி ஆதாரத்துடன் விவரித்து இருக்கிறார். இதுபோல தில்லுமுல்லு வேலைகளை தமிழகத்திலும் அவர்கள் செய்ய முயலலாம். அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி. சனாதனத்தை எதிர்க்கிற கூட்டணி. பாஜக, சங்பரிவாரங்களை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் கூட்டணி என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் , தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம். எப்படியெல்லாம் இவற்றை நாம் எதிர்கொள்ளப் போகிறோம், எப்படி அதை முறியடிக்க போகிறோம், இதை மக்களிடம் எப்படி அம்பலப்படுத்த போகிறோம். வலது சாரிகளை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளின் வலிமை மென்மேலும் பெருக வேண்டிய தேவை உள்ளது.

இடதுசாரிகளின் வலிமை என்பது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தோடு இணைந்துது இயங்கக்கூடிய ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையாகும். அது சட்டமன்றத்தில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதில் இல்லை. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய, ஒன்று திரட்டப்பட வேண்டிய தேவைகள் தான் இன்று நம் முன் இருக்கின்ற சவாலாகும். அனைத்து ஜனநாயக கட்சிகளையும் அணி திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது. உங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற புரிதலோடு இதனை பதிவு செய்கிறேன் என்றார்.

Vignesh

Next Post

குட்நியூஸ்!. இந்த பொருட்களின் விலை குறையப்போகுது!. GST வரிவிதிப்பில் அதிரடி மாற்றம்!. பிரதமரின் இரட்டை தீபாவளி பரிசு விவரங்கள் இதோ!.

Sat Aug 16 , 2025
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
GST 1

You May Like