பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு.. உடனடியாக பணி விடுவிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி…!

tn school 2025

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அதன்படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும்போது பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Alert: மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க... வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...!

Sun Aug 17 , 2025
வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, […]
cyclone rain 2025

You May Like