Rain Alert: உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நாளை முதல் 23-ம் தேதி வரை மழை…!

rain 1

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 19-ம் தேதி மாலையில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 19 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா கேரளா கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெரும் துயரம்!. பாகிஸ்தான் திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!.

Mon Aug 18 , 2025
கைபர் பக்துன்க்வாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக பிரதமரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான் தெரிவித்ததாக ஏஆர்ஒய் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும், பெரிய அளவிலான பேரழிவை நேரில் கண்டதாகவும் வாலி கூறினார். “முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. புனரின் சாகர்சி பகுதியில், பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்து […]
Pakistan flash floods 11zon

You May Like