மக்களே…! இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. 50 கி.மீ வேகத்தில் வீசும் காற்று…!

cyclone rain 2025

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும்.


தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் – வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு – தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தூங்குவதற்கு முன் முகத்தில் நெய் தடவினால், இந்த 6 பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்!.

Tue Aug 19 , 2025
பண்டைய ஆயுர்வேதத்தில், நெய் அமிர்தம் போன்றது என்று கூறப்படுகிறது. இன்றும் கூட, பாட்டியின் சமையல் குறிப்புகளில் நெய் தோல் மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் நெய் தடவுவது சருமத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக மட்டுமல்லாமல், சுருக்கங்கள், கறைகள் மற்றும் மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது. வறண்ட சருமத்தைப் போக்க: முகத்தில் நெய் தடவுவது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க […]
ghee face tips 11zon

You May Like