அதிரடி..! சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்கு.. ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்..!

land registry new rules 11zon

சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


சொத்துக்கள் பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தின் சொத்துக்களை, சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு இடையே பிரித்து வழங்கும் முறையாகும். இது பொதுவாக குடும்பச் சொத்துக்களுக்குப் பொருந்தும், மேலும் இது ஒரு உடன்படிக்கை பத்திரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பாகப்பிரிவினை என்றால் என்ன..?

பாகப்பிரிவினை என்பது குடும்பச் சொத்துக்களை வாரிசுகளிடையே பிரித்து வழங்குவதைக் குறிக்கிறது. இது ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடையே உள்ள சொத்து உரிமைகளை முறைப்படி பிரித்து வழங்குவதாகும். இது பொதுவாக தந்தையின் வழி சொத்துக்களுக்குப் பொருந்தும், அதாவது தந்தையின் சொத்துக்களை அவரது வாரிசுகளுக்கு பிரித்து வழங்குவதாகும். இதற்கான உடன்படிக்கை பத்திரம் பதிவு செய்யப்படும்போது, இந்த பாகப்பிரிவினை சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும்.

பாகப்பிரிவினை ஏன் முக்கியம்?

குடும்பச் சொத்துக்களில் உள்ள உரிமைகளை தெளிவுபடுத்தவும், எதிர்காலத்தில் ஏற்படும் தகராறுகளை தவிர்க்கவும் பாகப்பிரிவினை உதவுகிறது. ஒவ்வொரு வாரிசுக்கும் உரிய பங்கு எது என்பதை சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கிறது. சொத்துக்களை நிர்வகிப்பதில் மற்றும் உரிமைகளை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குகிறது.

Vignesh

Next Post

இன்று உலக கொசு தினம்!. ஆண்டுதோறும் 10 லட்சம் பேரை கொல்லும் அபாயம்!. டெங்கு, மலேரியாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?. எளிய டிப்ஸ் இதோ!

Wed Aug 20 , 2025
ஒரே கொசுத்தொல்லையா இருக்குப்பா!. கொசுக்களை விட எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கொசு தினம் நினைவுகூரப்படுகிறது. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த கொசுக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்ட இயற்கையான ஆனால் பயனுள்ள வழிகள் உள்ளன. இன்று (ஆக.20) உலக கொசு தினம் […]
World Mosquito Day 11zon

You May Like