மக்களே…! வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி…!

cyclone rain 2025

தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்!. இந்தியாவில் 2 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு!. ஆனால் 40% பேருக்கு நோய் இருப்பதே தெரியாது!. லான்செட் அறிக்கை!

Sun Aug 24 , 2025
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்தியா இப்போது நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தி லான்செட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த நோய் பற்றி தெரியாது, இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீரிழிவு என்பது ஒரு அமைதியான கொலையாளியைப் போல உடலில் மெதுவாக பரவி, திடீரென சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு […]
diabetes

You May Like