fbpx

சந்திரயான் 3-ன் வெற்றி… அடுத்து விண்வெளிக்கு மனிதர்கள்… திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்…!

சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார் ‌.

வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் போன்ற நிலவு பயணத்தின் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார். மேலும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தோல்வி விகிதம் மிகக் குறைவு.

இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், சந்திரயான்-3-ன் மென்மையான தரையிறக்கம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அடுத்த பணிகளுக்கு ஒரு படிக்கட்டு. இளைஞர்கள் ஒரு தொழில் முனைவோராக இருக்க வேண்டும், அதாவது வேலை தேடுபவராக இருப்பதை விட வேலைகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகின் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியதாக கூறினார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.

Vignesh

Next Post

இன்று திறப்பு: அமெரிக்காவில் கையால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில்!… சிறப்பம்சங்கள் என்னென்ன?

Sun Oct 8 , 2023
இன்றைய நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நியூ ஜெர்சியில் இன்று திறக்கப்பட உள்ளது. நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அமெரிக்காவில் இருந்து 12,500 தன்னார்வலர்களால் 12 ஆண்டுகளாக அதாவது 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு வந்துள்ளது. கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாக அக்ஷர்தாம் […]

You May Like