தமிழக அரசு நடத்தும் பேச்சு போட்டி… முதல் பரிசுத்தொகை ரூ.5000 அறிவிப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

tn Govt subcidy 2025

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 01.09.2025 & 02.09.2025 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

பள்ளி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மாணவர்களுக்கான தலைப்பு-வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். காஞ்சித் தலைவன், அண்ணாவின் தமிழ்வளம், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு-எழுத்தாளராக அண்ணா, தமிழும் அண்ணாவும், பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் மேடைத்தமிழ், தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு – தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும், வைக்கம் வீரர். சுயமரியாதை இயக்கம். கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு-தன்மானப் பேரொளி, தெற்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாய விஞ்ஞானி பெரியார்தொண்டு செய்த பழுத்த பழம்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும். மூன்றாம் பரிசாக ரூ.2000/-மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைகல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

“திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம்”..!! இதை உண்மையாக்குவது எப்படி..? நீண்ட நேரம் அடைத்து வைப்பதே இதற்குத்தான்..!!

Wed Aug 27 , 2025
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது. திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது […]
Thirupathi 2025

You May Like