குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கத்தி முனையில் 22 வயது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது அண்ணனை போலீசார் கைது செய்தனர். வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கான 181 உதவி எண்ணை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புதன்கிழமை உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் தனது சகோதரர் மீது முறையான புகார் அளித்தார்.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது அவரது சகோதரருக்கு நன்கு தெரியும். தங்கை காதலிப்பதை அம்மா அப்பவிடம் சொல்லிவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் கத்தி முனையில் மிரட்டி தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்தூள்ளார். மேலும், அவரது வலது தொடையில் பீடியால் சூடு வைத்துள்ளார்.
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த போது பயன்படுத்திய கத்தியையும், அணிந்திருந்த ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அந்த நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 64(2)(F)(M) மற்றும் 115(2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: GST 2.0 புதிய விகிதங்கள்.. எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்.. குறையும்..? – முழு விவரம்..