மக்களே..! தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…!

bus 2025 5

மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1,115 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து 130 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றவர்கள் சென்னை திரும்ப செப்டம்பர் 7-ம் தேதி 875 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாட்களில் மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார இறுதியில் பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் முன்பதிவு செய்து உள்ளனர்.

Read More: ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தையை எழுதியவர் யார்?. எதற்காக சுபாஷ் சந்திர போஸ் குரல் கொடுத்தார்?. இப்படியொரு வரலாறு இருக்கா?.

Vignesh

Next Post

அமைச்சர் PTR சொன்ன ரூ.30,000 கோடி... 2026-ல் அதிமுக ஆட்சி வந்தவுடன் விசாரணை...! இபிஎஸ் அதிரடி...

Thu Sep 4 , 2025
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய & தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி; “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை […]
stalin eps

You May Like