தமிழகம் முழுவதும் இன்று மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு…!

முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது‌. இதை முன்னிட்டு இன்று மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதி மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், கிளப்பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக்கூடங்கள் போன்றவற்றில் இன்று மதுபானம் விற்பனை செய்ய கூடாது. அனைத்து மது விற்பனை கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் மது கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

அதே போல, தருமபுரி மாவட்டத்தில் இன்று மிலாடி நபி முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A /FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கரம்!. 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் வரை குலுங்கிய பூமி!

Fri Sep 5 , 2025
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 4) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா (கேபி) மாகாணங்களின் பல நகரங்களில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. பெஷாவர், மன்சேரா, ஹங்கு, அபோட்டாபாத், ஸ்வாட், அட்டோக் மற்றும் மலாகண்ட் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இதனால் குடியிருப்பாளர்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். […]
afghanistan earthquake

You May Like