#Flash : காலையில் கொளுத்தி போட்ட செங்கோட்டையன்! மாலையில் இபிஎஸ் வாகனத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுக்கை.. தேனியில் பரபரப்பு..!

eps campaign

ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.


ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.. எனினும் எந்த நிபந்தனையும் கட்சியில் இணைய தயார் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினார்.. அதையும் இபிஎஸ் பொருட்படுத்தவேவில்லை.. சசிகலாவும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்று கூறி வருகிறார்..

இந்த சூழலில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் இபிஎஸ் வாகனம் செல்லும் வழியில் அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இபிஎஸ் இன்று தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.. அப்போது தேனி மாவட்டம் அனுமந்தன்படியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை அதிமுக தொண்டர்கள் வழிமறித்தனர்.. அவரின் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் தொண்டர்கள் முழக்கமிட்டனர்..

அதிமுகவில் இருந்து வெளியேறிய தலைவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.. இபிஎஸ் அவர்களை பார்த்துக் கொண்டே சென்ற நிலையில், அவரின் வாகனத்தில் இருந்த காவலர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. இதன் மூலம் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்க்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது..

RUPA

Next Post

மகாலட்சுமி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் லாட்டரி! பண மழை தான்!

Fri Sep 5 , 2025
கிரகங்களின் இணைப்பால் உருவாகும் பல ராஜ யோகங்களில், மகாலட்சுமி ராஜ யோகம் மிகவும் புனிதமானது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகம் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த அரிய யோகம் செவ்வாய் மற்றும் சந்திரனின் சிறப்பு இணைப்பால் உருவாகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர்களுக்கு மகத்தான நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் […]
rare yogam horos

You May Like