சாதி எண்ணம் உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்..! அரசு அதிரடி உத்தரவு…!

tn school 2025

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாகப் பராமரிக்கப்படுவது அவசியம். மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்’ குழு திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவது தெரிய வந்தால், அதை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

SA20 ஏலம்!. CSK அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மீது பண மழை!. வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரரானார்!

Wed Sep 10 , 2025
தென்னாப்பிரிக்கா லீக் 2026க்கான ஏலத்தில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பரபரப்பை ஏற்படுத்தி வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார். இந்த வீரர் ஏலத்தில் ஆடம் மார்க்ராமை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தென்னாப்பிரிக்காவின் T20 லீக் SA20 இன் வரவிருக்கும் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்து வருகிறது. இந்த பெரிய ஏல நிகழ்வில் உலக கிரிக்கெட்டில் இருந்து பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். இந்த லீக்கின் நான்காவது சீசன் டிசம்பர் […]
dewald brevis

You May Like