இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, வள்ளலார் நினைவு தினம் போன்ற முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், தலைசிறந்த சமூகத் தலைவர்களின் நினைவு தினங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினம் இன்று அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள்.
இதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி இன்று (செப்டம்பர் 11) ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



